விளையாட்டு

img

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயமோகன் மகனால் அடித்து கொலை

கொல்லம்
கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தின் மணக்காடு பகுதியில் வசித்து வருபவர் ஜெயமோகன் தம்பி. ஸ்டேட் வங்கியின் துணை மேலாளராக பணியாற்றி  ஓய்வு பெற்ற இவர் கேரள அணிக்காக ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடியுள்ளார். இவரது மனைவி அனிதா காலமான நிலையில், தனது மூத்த மகன் அஸ்வினுடன் வாழ்ந்து வருகிறார். மனைவி இருந்த துக்கத்தில் இருந்தே தனது மகன் அஸ்வினுடன் இணைந்து மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. 
இந்நிலையில் கடந்த திங்களன்று ஜெயமோகன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். உடலை கைப்பற்றிய போலீசார் பல்வேறு வகையில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சம்பவம் நடந்த அன்று அஸ்வின் தனது தந்தையை வீட்டுக்குள் இழுத்து செல்லும் காட்சியை பார்த்ததாக பக்கத்து வீட்டு பெண் போலீசிடம் கூற, குடிபோதையில் இருந்த மகனால் அவர் அடித்து கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது.   

என்ன பிரச்சனை   
ஜெயமோகனின் மூத்த மகன் அஸ்வின் உணவகத்தில் சமையல்காரராக வேலை செய்து வருகிறார். வேலை செய்தாலும் பண தேவைக்கு தந்தையை சார்ந்தே இருந்துள்ளார். ஏ.டி.எம். கார்டு பிரச்சனை காரணமாக இருவருக்கும் பிரச்சனை முளைத்துள்ளது. இதில் ஏற்பட்ட தகராறில் அஸ்வின் தனது தந்தையை அடித்து கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தில் ஆயுதங்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என போலீசார் கூறியுள்ளனர்.

குடிபோதையில் தனது தந்தையை மகன் அடித்து கொன்ற சம்பவம் கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள்ளது. 

;