விளையாட்டு

img

திணறும் மெஸ்ஸியின் பார்சிலோனா

லா லிகா 

ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து கிளப் தொடரான லா லிகா தொடரில் தற்போது 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. எப்பொழுதும் டாப் ஆர்டராக வலம் வரும் மெஸ்ஸியின் பார்சிலோனா அணி இந்த முறை கடுமையாகத் திணறி வருகிறது. சுவரெஸ்(உருகுவே), கிரீஸ்மேன் (பிரான்ஸ்) போன்ற நட்சத்திரங்கள் இருந்தும் திணறி வருவது பார்சிலோனா ரசிகர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம்  அதெல்ட்டிக்கோ பில்பாவோ அணியிடம் அதிர்ச்சி தோல்வியைச் சந்தித்த பார்சிலோனா அணி அன்று முதல் இன்று வரை கத்துக்குட்டி அணிகளிடம் கூட கடுமையாகப் போராடித் தான் வெற்றியை ருசித்து வருகிறது. 

நடப்பு ஆண்டு சீசனில் பார்சிலோனா அணி 22 புள்ளிகளுடன் முதலிடத்திலிருந்தாலும் அந்த இடம் எப்பொழுது வேண்டுமானாலும் பறிக்கப்படுவது உறுதி.ஏனென்றால் ரியல் மாட்ரிட், ரியல் சோசிடட் அணிகள் அதே 22 புள்ளிகளுடன் 2,3-வது இடத்தில் உள்ளது. அதிரடிக்குப் பெயர் பெற்ற அதெல்ட்டிக்கோ மாட்ரிட், செவில்லா அணிகள் 21 புள்ளிகளுடன் 4,5-வது இடத்தில் உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் பார்சிலோனா கோல்களின் அடிப்படையில் தான் முதலிடத்தில் உள்ளது என்பதால் அந்த அணிக்கு இது பலத்த பின்னடைவாகக் கருதப்படுகிறது.     இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் ரொனால்டோ இல்லாத ரியல் மாட்ரிட் கூட அசத்தலாக விளையாடி 2-வது இடத்தில் உள்ளது. ரியல் மாட்ரிட் ஆட்டத்திறனில் மாற்றமில்லாமல் அசத்தலாக விளையாடி பார்சிலோனா அணியின் கோப்பை கனவுக்குக் குடைச்சல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

;