விளையாட்டு

img

இந்திய கால்பந்து வீரர் பி.கே. பானர்ஜி காலமானார்

இந்திய கால்பந்து உலகின் முன்னாள் நட்சத்திர வீரரும் 20-ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த வீரருமான பி.கே. பானர்ஜி (83) சமீபத்தில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.  கடந்த சில நாட்களாக நோய் முற்றி மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட பி.கே. பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் வெள்ளியன்று காலமானார். பி.கே.பானர்ஜியின் மறைவுக்கு விளையாட்டு உலகம் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

வரலாற்றுச் சாதனைகள் 

ஆசியப் போட்டியில் இந்திய அணிக்கு தங்கப்பதக்கம் பெற்றுத் தந்த பி.கே. பானர்ஜி 2004-ஆம் ஆண்டு சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் விருதை வென்றார். தொடர்ந்து பத்ம ஸ்ரீ, அர்ஜுனா ஆகிய விருதுகளை அடுத்தடுத்து வென்று புதிய சாதனை படைத்தார். அர்ஜுனா விருது பெற்ற முதல் கால்பந்து வீரர் என்ற புதிய வரலாறை படைத்தது மட்டுமல்லாமல் 20-ஆம் நூற்றாண்டின் சிறந்த இந்திய கால்பந்து வீரர் என்ற தனிநபர் பட்டத்தையும் வென்றார். 1967-இல் கால்பந்து விளையாட்டிலிருந்து பானர்ஜி ஓய்வு பெற்ற பின்பு சிறந்த பயிற்சியாளராகவும் பணியாற்றி அசத்தினார். 
 

;