விளையாட்டு

img

ஜெட் வேகத்தில் பரவும் கொரோனா வைரஸ் ஐரோப்பாவில் சிக்கித் தவிக்கும் கால்பந்து வீரர்கள்

சீனாவிலிருந்து படிப்படியாக உலகம் முழுவதும் தனது ஆட்டத்தைத் துவங்கியுள்ள கொரோனா என்னும் புதிய வகை ஆட்கொல்லி வைரஸ் தற்போது ஐரோப்பா கண்டத்தை மிரட்டி வருகிறது. இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளில் அதிக சேதாரத்தைச்   சந்தித்துள்ள நிலையில், கிளப் கால்பந்து தொடருக்காக ஐரோப்பாவுக்குச் சென்ற வெளிநாட்டு வீரர்கள் பலர் இன்னும் சொந்த ஊர் திரும்ப முடியாமல் அங்கு சிக்கியுள்ளனர். ஐரோப்பா கண்டத்தில் போர்ச்சுக்கல் கேப்டன் ரொனால்டோ எங்கு இருக்கிறார் என்ற தகவல் மட்டுமே இதுவரை கசிந்துள்ளன. மற்ற வீரர்கள் எங்கு இருக்கிறார்கள் என்ற முழுமையான தகவல் வெளியாகவில்லை. ஜூவென்டஸ் அணிக்காக விளையாடி வரும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிளைசே மட்டுடி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஜூவென்டஸ் அணி நிர்வா கம் தனிமையில் சிகிச்சை அளித்து வருகிறது.

;