விளையாட்டு

img

ஐபிஎல் தொடர் ஒத்திவைப்பு... 

மும்பை 
கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய உள்ளூர் டி-20 தொடரான ஐபிஎல் தொடரின் 13-வது சீசன் மார்ச் 29-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது. 

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதற்குள் கொரோனா ஒழிந்துவிடும் நாம் இதே தேதியில் ஐபிஎல் தொடர் நடத்தி விடலாம் என பிசிசிஐ கணக்குப் போட்டது. முதல் கட்ட ஊரடங்கில் கொரோனவை கட்டுப்படுத்த முடியாததால் மே 3-ஆம் தேதி வரை 2-ஆம் கட்ட ஊரடங்கை மத்திய அரசு அறிவித்தது. 

தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள், ஐபிஎல் அணி உரிமையாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த கூட்டத்தின் முடிவில் ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
 

;