விளையாட்டு

img

24-ஆம் தேதி இறுதி ஆலோசனை

ஐபிஎல் தொடர்

கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய உள்ளூர் டி-20 தொடரான ஐபிஎல் தொடரின் 13-வது சீசன் வரும் 29-ஆம் தொடங்கும் நிலையில், கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஏப்ரல் 15-ஆம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.   பெயரளவில் ஒத்திவைக்கப்பட்டாலும் ஏப்ரல் மாத காலகட்டத்தில் இந்தியாவில் கொரோனா வைரஸின் பாதிப்பைப் பொறுத்துத் தான் ஐபிஎல் தொடர் குறித்து அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார்.   இந்நிலையில், ஐபிஎல் தொடர் ஒத்திவைப்பு தொடர்பாக விவாதிக்க வரும் 24-ஆம் தேதி இந்திய கிரிக்கெட் வாரியம் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளது.  ஐபிஎல் உரிமையாளர்கள் மற்றும் இதர நிர்வாகிகள் கலந்து கொள்ளும் இந்த கூட்டம் “வீடியோ கான்பரன்ஸ்” மூலம் நடைபெறுகிறது.
 

;