விளையாட்டு

img

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் :   நடால் தோல்வி.. தியம் அசத்தல்  

மெல்போர்ன் 
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதி சுற்று இன்றுடன் நிறைவு பெற்றது.  ஆடவர் ஒற்றையர் பிரிவு கடைசி காலிறுதி ஆட்டத்தில் டென்னிஸ் உலகின் முதல்நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், தரவரிசையில் 5-வது  இடத்தில் உள்ள ஆஸ்திரியாவின் டோமினிக் தியமை எதிர்கொண்டார். நடால் உலக சாம்பியன் வீரர் என்பதைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் தனது ஆட்டத்தில் மட்டும் கவனம் செலுத்திய தியம் முதலிரண்டு செட்களை 7-6 (7-3), 7-6(7-4) என்ற கணக்கில் கைப்பற்றினார்.   

மூன்றாவது செட்டை நடால் 6-4 என்ற கணக்கில் கைப்பற்ற ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. 4-வது செட்டை தியம் 7-6(8-6) என்ற செட் கணக்கில் கடும் போராட்டத்துடன் கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார். சர்வீஸ் மற்றும் அதிரடி ஷாட்களில் ஆக்ரோசமாக அசத்திய தியமை அனைத்து தரப்பு ரசிகர்களும் மைதானம் குலுங்கப் பாராட்டினார்.

;