வானிலை

img

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்!

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும்,தென்மேற்கு பருவக் காற்றின் சாதக போக்கின் காரணமாக நீலகிரி மற்றும் கோவையில் அடுத்த 24 மணி நேரத்தில்  கன மழைக்கும் வாய்ப்பு உள்ளது.

மேலும் தென் மேற்கு வங்கக்கடலில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்கச்செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
 

;