வணிகம்

img

மார்ச் 31க்கு பிறகு ஆதாருடன் இணைக்கப்படாத பான் கார்டு செல்லாது - வருமான வரித்துறை அறிவிப்பு

ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத பான் கார்டு வரும் மார்ச் 31-ஆம் தேதிக்கு பிறகு  செல்லாது என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்க பலமுறை அவகாசம் வழங்கப்பட்டது. ஆனாலும் இதுவரை 30 கோடியே 75 லட்சம் பேர் மட்டுமே ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். 17 கோடியே 58 லட்சம் பேர் ஆதார் எண்ணுடன் இணைக்கவில்லை. இந்த சூழலில், தற்போது வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் அடுத்த மாதம் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், ஆதார் எண்ணுடன் இணைப்படாத பான் கார்டு, வரும் மார்ச் 31-ஆம் தேதிக்கு பிறகு செல்லாது என வருமான வரித்துறை அறிவித்துள்ளது. 
 

;