வணிகம்

img

ரூ. 268 கோடி நஷ்டத்தில் மாருதி சுஸூகி நிறுவனம்... டிவிஎஸ்சும் ரூ. 142 கோடிக்கு நஷ்டக் கணக்கு

புதுதில்லி:
கொரோனா பாதிப்பால், மாருதி சுஸூகி நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது.

வாகன விற்பனையில் பெரும் சரிவுஏற்பட்ட, 2019ஆம் ஆண்டின் ஏப்ரல் - ஜூன்காலாண்டில் கூட ரூ. ஆயிரத்து 370 கோடியை, மாருதி சுஸூகி லாபமாக ஈட்டி யிருந்தது.ஆனால், 2020 ஏப்ரல் - ஜூன் காலாண்டில் ரூ. 268 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ள தாக மாருதி சுஸூகி கூறியிருக்கிறது.மேலும், “வருவாயைப் பொறுத்த வரையில் 78 சதவிகித வீழ்ச்சியுடன் ரூ. 4ஆயிரத்து 110 கோடியே 60 லட்சம் மட்டுமேகிடைத்துள்ளது. வாகன விற்பனையிலும் 81 சதவிகிதம் சரிவு ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் - ஜூன் மாதங்களில் மொத்தம் 76ஆயிரத்து 599 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளன” என்றும் மாருதி சுஸூகி கூறியுள்ளது.இதேபோல, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட டிவிஎஸ் நிறுவனமும், ஏப்ரல் - ஜூன் காலாண்டில் ரூ. 142கோடியே 30 லட்சம் இழப்பைச் சந்தித்துள்ளது.2019ஆம் ஆண்டின் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் மொத்தம் 8 லட்சத்து 84 ஆயிரம்வாகனங்களை டிவிஎஸ் விற்பனை செய்திருந்தது. ஆனால், 2020 ஏப்ரல் - ஜூன்காலாண்டில் மொத்தம் 2 லட்சத்து 55ஆயிரம் வாகனங்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளதாக தெரிவித்துள்ளது.

;