செவ்வாய், ஆகஸ்ட் 4, 2020

வணிகம்

img

3 ஆவது மாதமாக இந்தியாவின் ஏற்றுமதி சரிவு

புதுதில்லி:
இந்தியாவின் ஏற்றுமதி - இறக்குமதி குறித்த விவரங்களை நவம்பர்15-ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில், இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் தொடர்ந்து 3-ஆவது மாதமாக சரிவைச் சந்தித்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.அக்டோபர் மாதத்தில் மொத்தம் 26.38 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் மற்றும் சேவைகளை இந்தியா வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறது. இது கடந்த 2018 அக்டோபர் மாத ஏற்றுமதி அளவைவிட 1.11 சதவிகிதம் குறைவாகும். 2019 செப்டம்பரிலும் இந்தியாவின்ஏற்றுமதி 6.57 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்திருந்தது. 26 பில்லியன் டாலர்மதிப்புக்கு மட்டுமே அப்போது ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது. இதன்காரணமாக, 2019 அக்டோபருடன் தொடர்ந்து மூன்றாவது மாதமாக இந்தியாவின் ஏற்றுமதி சரிவைச் சந்தித்திருக்கிறது.பெட்ரோலியம் பொருட்கள், தோல், ஆயத்த ஆடைகள், கார்பெட்,வேளாண் பொருட்கள் போன்ற பிரிவில் வீழ்ச்சி ஏற்பட்டதால்தான் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி சரிவைச் சந்தித்துள்ளது.இறக்குமதியைப் பொறுத்தவரையில், அக்டோபர் மாதத்தில் 37.39 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் இறக்குமதி செய்யப் பட்டுள்ளன. இது 2018 அக்டோபர் மாதஇறக்குமதியை விட 16.31 சதவிகிதம் குறைவாகும். கச்சா எண்ணெய் இறக்குமதி 31.74 சதவிகிதம் சரிந்து 9.63 பில்லியன் டாலருக்கு மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. 2019-20 நிதியாண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏழுமாதங்களில் இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் 2.21 சதவிகிதம் குறைந்து 185.95 பில்லியன் டாலராக இருந் துள்ளது. அதேபோல, இறக்குமதி மதிப்பு 280.67 பில்லியன் டாலராக இருக்கிறது. இது 8.37 சதவிகிதம் குறைவாகும்.

;