வணிகம்

img

எண்ணூர் துறைமுகத்தின் பங்குகள் சென்னை துறைமுகத்திற்கு விற்பனை

சென்னை, மார்ச் 27- கொரோனா வைரஸ் தொற்றால் நாடே முடக்கப் பட்டுள்ள போதிலும் பொதுத் துறை பங்கு விற்பனையை மோடி தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து செய்து  வருகிறது.

நெப்கோ என்ற வடகிழக்கு  மின் உற்பத்தி கழகத்தின் ரூ.4 ஆயிரம் கோடி மதிப்புள்ள பங்குகளை தேசிய அனல் மின்கழகம் (என்டிபிசி) என்ற மற்றொரு பொதுத்துறை நிறுவனத்திடம் விற்றுள்ளது. இதேபோல்   சென்னை எண்ணூ ரில் உள்ள காமராஜர் துறைமுக பொறுப்புக்கழகத்தில் அரசுக்கு உள்ள  பங்குகளில் 2383 கோடி  ரூபாய் மதிப்புள்ள  66.67 விழுக்  காடு பங்குகளை சென்னை  துறைமுக பொறுப்புக்கழ கத்திடம் விற்றுள்ளது.

இந்த பங்கு விற்பனையை முடித்துக்கொடுக்க மத்திய அரசால் நியமிக்கப்பட்ட சுயேட்சையான ஆலோசனை நிறுவனமான ஆர்.பி.எஸ்.ஏ அட்வைசர்ஸ் நிர்வாக இயக்கு நர் அஜய் மல்லிக் இந்த தகவ லைத்  தெரிவித்துள்ளார்.

 

;