வணிகம்

img

குறையும் தங்கம் விலை..!

சென்னை, செப்.11- தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின்  விலை, கடந்த ஒரு வார காலத்தில் சுமார் ஆயிரம் ரூபாய் வரை குறைந்துள்ளது. புதனன்று(செப்.11) ஒரு சவரன் தங்கம்  29 ஆயிரத்து 72 ரூபாய்க்கு விற்பனை யானது. கடந்த 4ஆம் தேதி அன்று ரூ. 29 ஆயிரத்து  928 -க்கு புதிய உச்சத்தை எட்டிய ஒரு சவரன் தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்து வந்தது. இந்நிலையில் சென்னை யில் புதன்கிழமை ரூ. 120 குறைந்து 29 ஆயிரத்து 72 ரூபாய்க்கு விற்பனை யானது. இதனால் கடந்த ஒரு வார காலத்தில்  தங்கத்தின் விலை கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய் வரை குறைந்துள்ளது. ஒரு கிராம் 15 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 634 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்துள்ளது. வெள்ளி ஒரு கிராம் 51 ரூபாய் 20 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ 50 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் 300 ரூபாய் அதிகரித்து 51 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

;