வணிகம்

img

தங்கம் விலையில் லேசான மாற்றம் 

சென்னை
சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றத்தின் தாக்கம் இந்தியாவிலும் பிரதிபலிக்கிறது. அதாவது தங்கத்தின் விலை ஏற்றமும், இறக்கமுமாய் அடிக்கடி மாற்றம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக டிசம்பர் மாதத்தின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்றைய தினம் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.3,597 ஆக இருந்தது. புதன்கிழமை நிலவரப்படி தங்கம் ஒரு கிராமிற்கு 6 மூலம் பவுனுக்கு 48 ரூபாய் குறைந்துள்ளது. தற்போது ஒரு பவுன் (8 கிராம்) தங்கம் 28,728 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தூய தங்கத்தின் விலையும் 48 ரூபாய் குறைந்துள்ளது. தூய தங்கத்தின் விலை பவுனுக்கு 30,216 ரூபாயிலிருந்து 30,168 ரூபாயாகக் குறைந்துள்ளது. 

;