வணிகம்

img

குஜராத் தொழிற்சாலையை விற்க ஃபோர்டு நிறுவனம் முடிவு

ஆட்டோமொபைல் துறையில் காணப்படும் வீழ்ச்சி மற்றும் மந்தமான வர்த்தகம் காரணமாக ஃபோர்டு நிறுவனத்துக்கு சொந்தமான குஜராத் தொழிற்சாலையை விற்பனை செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. 

உலகில் சிறந்த கார் தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்றான ஃபோர்டு நிறுவனம், கார் மற்றும் இன்ஜின் தயாரிப்புக்காக இந்தியாவில், சென்னை மற்றும் குஜராத் ஆகிய இரு இடங்களில் தொழிற்சாலையை நடத்தி வருகிறது. இதில், குஜராத் தொழிற்சாலையில் இருந்து தயாரிக்கப்படும் கார்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. அதே போல், சென்னை தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் கார்கள், உள்நாட்டு சந்தைக்குப் பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில், ஆட்டோமொபைல் துறையில் காணப்படும் வீழ்ச்சி மற்றும் மந்தமான வர்த்தகம் காரணமாக, தனது குஜராத் தொழிற்சாலையை விற்பனை செய்ய ஃபோர்டு நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதற்காக வெளிநாட்டு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்த குஜராத் தொழிற்சாலை, கடந்த சில வருடங்களுக்கு முன்பு தான் 1 பில்லியன் டாலர் முதலீட்டில் கட்டப்பட்டது. கடந்த மார்ச் 2015-ஆம் ஆண்டு முதல் இங்கு கார் மற்றும் இன்ஜின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்தத் தொழிற்சாலை, வருடத்திற்கு 2,40,000 கார்கள் மற்றும் 2,70,000 இன்ஜின்கள் தயாரிக்கக்கூடிய அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

;