மாவட்டங்கள்

img

ஏவிசி கல்லூரி மாணவிகளுக்கு முன்னணி நிறுவனத்தில் பணி

மயிலாடுதுறை, நவ.13- மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி பொறியியல் கல்லூரி  மாணவிகளுக்கு முன்னணி மென்பொருள் நிறுவ னத்தில்  பணியாற்ற பணி நியமன ஆணை வழங்கப் பட்டது.  ஏ.வி.சி பொறியியல் கல்லூரியின் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு துறை மூலமாக இக்கல்லூரியில் பயிலும் மாணவர்களின் திறமையை மற்றும் ஆற்றலை அறிந்து அதற்கேற்ப அனைவருக்கும் சிறப்பு பயிற்சி தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.  இறுதியாண்டு மாணவர்கள் தங்களின் திறனுக்கு ஏற்ப பல்வேறு சிறந்த தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்று செல்கின்றனர். அவ்வகையில், நிகழாண்டு இ.சி.இ துறையை சார்ந்த மாணவிகள் நிவேதிதா மற்றும் சௌந்தர்யா ஆகியோர் இந்தியாவின் முன்னணி மென்பொ ருள் நிறுவனமான காக்னிஸன்ட் டெக்னாலஜி சொல்யூ ஷன்ஸ் நடத்திய நேர்காணலில் பங்கேற்று வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். பணி ஆணை பெற்ற மாணவிகளை கல்லூரியின் செயலர் கி.கார்த்திகேயன், முதல்வர் முனைவர் சி.சுந்தர்ராஜ், இயக்குனர் நிர்வாகம் முனைவர் எம்.செந்தில்முருகன், பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு துறை ஒருங்கிணைப்பா ளர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர். 

;