மாவட்டங்கள்

மின் வாரியத்தை தனியார்மயமாக்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தரங்கம்பாடி, ஜூன் 1- நாகை மாவட்டம், சங்கரன்பந்த லில் மின்வாரியத்தை தனியார்மய மாக்கும் மத்திய அரசின் போக்கை எதிர்த்து அனைத்து சங்க மின் ஊழி யர்கள் பொறியாளர்கள் எதிர்ப்பு நாள் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் திட்ட செயலாளர் எம். கலைச்செல்வன் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மின் ஊழியர்கள் கலந்து கொண்ட னர்.    இதே போல் மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பொன்னமராவதி மின் வாரிய அலு வலக வாயிலில் மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) திருமயம் கோட்ட தலைவர் ஆர்.ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தொ.மு.ச திருமயம் கோட்ட தலைவர் ஏ.ராஜேந்திரன், தொழிலா ளர் பொறியாளர் ஐக்கிய சங்கத்தின் ஏ.அடைக்கலராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அனைத்து சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

மன்னார்குடி
மின் துறையை தனியார் மயமாக்க வகை செய்யும் மின்சார சட்டத் திருத்த மசோதாவை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் சார்பில் மன்னார்குடி யில் மின் கோட்ட பொறியாளர் அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தி ற்கு சம்மேளனப் பிரதிநிதி த.ராஜ கோபால் தலைமை வகித்தார். பொறியாளர் சங்க திருச்சி மண்டல செயலாளர் சா.சம்பத், தொழிலாளர் முன்னேற்ற சங்க திட்ட சிறப்பு தலைவர் ஜோதி ராமலிங்கம், கோட்ட செயலாளர் சு காளிதாஸ், சம்மேளன கோட்ட செயலாளர் ஜெயபால், மின் ஊழியர் மத்திய அமைப்பு திட்டத் தலைவர் சி சகாயராஜ், ஐக்கிய சங்க நிர்வாகி ஜே முத்து மாணிக்கம், ஓய்வு பெற்ற சங்க நிர்வாகி பாண்டுரங்கன் ஜி கருணாநிதி உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் பொறியாளர்கள், ஊழியர்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்.

பெரம்பலூர்
பெரம்பலூர் நான்கு ரோடு பகுதி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் கருப்பையா தலைமை வகித்தார். மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில செயலாளர் அகஸ்டின் முன்னிலை வகித்தார். செயற்பொறியாளர் சேகர், பொறியாளர் கழக வட்ட செயலாளர் வெங்கடேஷ், பொறியாளர் சங்க நிர்வாகிகள் சித்ரா, செல்வராஜ், தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் மாரிமுத்து, திலக், விவசாயிகள் சங்க பொறுப்பாளர் ராஜேந்திரன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர் 
மின்வாரிய அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பாக தஞ்சை மாவட்டம் முழுவதும் மின்வாரிய அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டங்களில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பாக மாநில துணைத் தலைவர் எஸ்.ராஜாராமன், வட்டச் செயலாளர். பி.காணிக்கைராஜ், பொருளாளர் எம்.ஆரோக்கியசாமி, வட்டத் தலைவர் அதிதூத மைக்கேல் ராஜ், நிர்வாகிகள் சங்கர், ரவி, மணி வண்ணன், ரமேஷ், தேவேந்திரன், ஷேக் அகமது உஸ்மான் உசேன், சந்தன முத்து, ராதா, ஹரிகேசவன், சிஐடியு மாவட்ட தலைவர் டி.கோவிந்தராஜூ, மின்சார தொழிலாளர் சம்மேளன வட்டச் செயலாளர் தங்கவேலு, தலைவர் முபாரக் பாட்சா, மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க மாநில அமைப்பு செயலாளர் ஆண்ட்ரூஸ் கிறிஸ்டி, தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம் சார்பாக வட்டச் செய லாளர் ராகவன், பொறியாளர் சங்கம் சார்பாக மாநில நிர்வாகி சுந்தர்ராஜ், வட்ட நிர்வாகிகள் சுந்தர், சிஙகாரவேலு, மற்றும் பொறியாளர் கழகம் சார்பாக செயலாளர் மகாலிங்கம்,  மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு நிர்வாகிகள் கணேசன் முனி யாண்டி, ஏஐடியுசி நிர்வாகி துரை.மதி வாணன், சிஐடியு மாவட்ட நிர்வாகி செங்குட்டுவன், அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க நிர்வாகி அன்புமணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்டம் முழுவதும் பொறியாளர், தொழிலாளர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

;