மாவட்டங்கள்

ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை காவல்துறை நாடகத்தை அம்பலப்படுத்திய சிசிடிவி

மதுரை, ஜூன் 30- ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் குறித்த முதல் தகவலறிக்கையில் தந்தை மற்றும் மகன் இருவரும் தரையில் உருண்டார்கள். இதனால் அவர்களுக்கு உள் காயங்கள் ஏற்பட்டுள்ளது என கூறப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் இருவரும் தரையில் படுத்து உருளவில்லை என்பது சிசிடிவி காட்சிகளில் தெளிவாகியுள்ளது. சாத்தான்குளத்தில் உள்ள ஃபென்னிக் ்ஸின் செல்போன் கடைக்கு அருகிலுள்ள கிங் எலக்ட்ரிக்கல்ஸின் சி.சி.டி.வி காட்சிகள், இரண்டு காவல்துறையினர் ஜெயராஜூடன் சாதாரணமாக நின்று பேசுகின்றனர். பின்னர் காவல்துறையினர் ஜெயராஜூடமிருந்து விலகிச்செல்கின்றனர். பின்னர் காவ லர்கள் அழைத்தன் பேரில் அவர் சாலை யைக் கடந்து செல்கிறார். பின்னர், வெளிர் நிற சட்டை  நீல நிற லுங்கி அணிந்த ஒருவர், பென்னிக்ஸின் கடைக்குள் செல்கிறார்  அவர் ஆட்டோ ஓட்டுநர் பாண்டி. அவர் பென்னிக்ஸிடம் ஜெயராஜை காவல்துறையினர் அழைத்துச் சென்றதாக கூறுகிறார். இத னால் பென்னிக்ஸ் வெளியே ஓடிவந்து தனது நண்பருடன் சாலையைக் கடந்து செல்கிறார்.

அவர்களைக் கடந்து வேன் ஒன்று செல்கிறது. பெனிக்ஸ் அவரது நண்ப ருடன் கடைக்குத் திரும்புகிறார். சிலரை தொடர்பு கொண்டு பேசிய பென்னிக்ஸ் தனது நண்பருடன் புறப்பட்டுச் செல்கிறார். இந்த சம்பவங்கள் இரவு எட்டு மணிக்கு நடந்துள்ளது. காவல்துறை முதல் தகவலறிக்கை யில்,   காவலர்கள் இரவு 9.15 மணியளவில் அந்த பகுதிக்கு ரோந்து சென்றார். ஏபிஜே மொபைல்கள் கடை ஊரடங்கு உத்தர வுக்கு பின்பும் திறந்திருந்தது. இது ஊரடங்கு விதிகளை மீறியதாகும். கடைக்கு முன்னால், ஜெயராஜ், பென்னிக்ஸ் மற்றும் ஒரு சிலர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை வீட்டிற்கு செல்லுமாறு கேட் டுக்கொண்டோம். மற்றவர்கள் நாங்கள் சொல்வதைக்கேட்டு வீட்டிற்குச் சென்றனர். ஆனால் ஜெயராஜூம் அவரது மகனும் தரையில் உட்கார்ந்து வீட்டிற்கு செல்ல மறுத்து, எங்களை ஆபாசமாகப் பேசினர், தரையில் உருண்டார்கள். அதன் காரண மாக அவர்களுக்கு உள் காயங்கள் ஏற்பட்டன தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

;