திங்கள், ஆகஸ்ட் 3, 2020

மாவட்டங்கள்

img

பொள்ளாச்சி: பொதுமக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை

பொள்ளாச்சி, ஜூலை 8-  பொள்ளாச்சியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் பொது மக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட் டது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உடுமலை சாலை யிலுள்ள பெரிய பள்ளிவாசல் எதிர்புறம் நகராட்சி நிர்வாகம் சார்பில் புதனன்று பொதுமக்களுக்கு இலவசமாக மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் விநியோகிக்கப்பட்டது.  பொள்ளாச்சி நகராட்சி சுகாதார ஆய்வாளர் தர்மராஜ் மற்றும் நகர் நல அலுவலர்கள் ஆகியோர் ஒருங்கிணைத்து  நடத்திய இம்முகாமினை, பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதில் பொள்ளாச்சி வட்டாட்சியர் திருஞானவேல் மற்றும் பொள்ளாச்சி கிராம நிர்வாக அலுவலர் தன்ராஜ்  உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

;