மாவட்டங்கள்

img

பெரம்பலூரில் நூல் வெளியீட்டு விழா

பெரம்பலூர், டிச.8- பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையம் அருகேயுள்ள அஸ்வின்ஸ் கூட்டரங்கில் சனிக்கிழமை மாலை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு, எழுத்தாளர் இரா. எட்வின் தலைமை வகித்தார். பாவேந்தர் இலக்கியப் பேரவை செயலர் கி. முகுந்தன், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் (பொ) து. சேகர், மருத்துவர் எஸ்.டி.ஜெயலட்சுமி, ஊராட்சி முன்னாள் தலை வர் பி.எம்.எஸ். முத்துசாமி ஆகியோர் முன் னிலை வகித்தனர்.  முனைவர் க. மூர்த்தி எழுதிய கள்ளிமடை யான் என்னும் நூலை எழுத்தாளர் புலியூர் முருகேசன் வெளியிட, அதை பாப்பாத்தி கணே சன், அகிலாண்டம் ராமசாமி, வசுமதிமூர்த்தி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து, பதியம் இலக்கிய சங்கம் தலைவர் க. தமிழ் மாறன், பேராசிரியர்கள் ப. செல்வக்குமார், அம்மணி சந்திரமௌலி, இலக்கியச் சாரல் மாவட்டத் தலைவர் கவிஞர் ராமர், முனைவர் க.தமிழ்மாறன், எஸ்.தேவிபாலா, இ.தாஹீர் பாட்ஷா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.  நூல் ஆசிரியர் முனைவர் க. மூர்த்தி, ஏற் புரை நிகழ்த்தினார். முனைவர் சா.காப்பியன் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் லட்சுமி மருத்துவமனை நிர்வாக இயக்குனர். சி.கருணாகரன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் என். செல்லதுரை உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். 

;