மாவட்டங்கள்

img

முடிதிருத்தும்  தொழிலாளர்களுக்கு நிவாரணம்

அறந்தாங்கி, மே 23- ஊரடங்கால் பாதிக்கப்பட்ட முடிதிருத்தும் தொழிலாளர்கள், மேடை மெல்லிசை கலைஞர்கள், காலணி மற்றும் குடை சீர்செய்யும் தொழிலாளர்கள் என 180 பேருக்கு ஒன்றரை லட்சம் மதிப்பிலான அரிசி, காய்கறிகள் மற்றும் முகக் கவசங்கள் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ரோட்டரி சங்கம் சார்பில் வழங்கப்பட்டது. சங்கத் தலைவர் ஆடிட்டர் தங்கதுரை தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆவுடையார் கோவில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் உதயம்சரண், ஐடியல் சேக்சுல்தான், சோழாபிளக்ஸ் கராத்தே கன்னையன், முன்னாள் தலைவர் பீர்சேக், பட்டய தலைவர் முரளிதரன், விவேகானந்தன், வெங்கட்குமார் உள்ளிட்டோர் அரிசிப் பை மற்றும் காய்கறிகளை வழங்கினர்.

;