மாவட்டங்கள்

img

கஜா புயலில் பாதிப்பு 2 பேருக்கு புதிய வீடுகள் 

 புதுக்கோட்டை, ஆக.13- கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 வீடுகளை புதுக்கோட்டை மாவட்டத்தில் இலவசமாக கட்டிக் கொடுக்க சென்னையில் இயங்கி வரும் எய்டு இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக 10 வீடு களுக்கான கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இதற்கான நிதி உதவியை பெங்கரைச் சேர்ந்த ஜூனிபர் அளித்துள்ளார். இதில் கட்டி முடிக்கப்பட்ட புதுக்கோட்டை ஒன்றியம் உப்புப்பட்டியைச் சேர்ந்த அய்யாக்கண்ணு மனைவி கல்யாணி, திருவரங்குளம் ஒன்றியம் செல்வராசு மனைவி பாண்டிச் செல்வி ஆகியோரது வீடுகள் செய்வாய்க்கிழமை திறக்கப்பட்டன. கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநிலத் தலைவர்களில் ஒருவரான கவிஞர் நா.முத்துநிலவன் திறந்து வைத்தார். நிகழ்வில் எய்டு இந்தியா சார்பாக சுவாமிநாதன், சுப்பிரமணியன், கவிஞர் கவிவர்மன், ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி, வனச்சரக அலுவலர் தாமோதரன் உள்ளட்டோர் பங்கேற்றனர். முன்னதாக எய்டு இந்தியா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.ராஜா வரவேற்க, சுமாமிநாதன் நன்றி கூறினார்.

;