மாவட்டங்கள்

அரசு வீடு பயனாளிகள் ஆலோசனைக் கூட்டம்

 பொன்னமராவதி, பிப்.23- புதுக்கோட்டை பொன்னமராவதி அருகே உள்ள சிவகங்கை மாவட்டம் எஸ். புதூர் ஒன்றியத்தில் பிரதமர் குடி யிருப்பு வீடு திட்டத்தில் வீடு கட்டிக் கொண்டிருக்கும் பயனாளிகள் மற்றும் செங்கல் சூளை சப்ளையர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி ) திருநாவுக்கரசு தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் பிரதீப் வரவேற்றார். ஒன்றிய தலைவர் விஜயா, துணைத்தலைவர் வீரம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கூட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் நடந்து கொண்டிருக்கும் வீடுகளுக்கு குறைந்த விலையில் செங்கல் சூளை சப்ளை யர்கள் சார்பில் பொருள்கள் வழங்கு மாறு கேட்டுக்கொண்டனர். இதில் பொன்னமராவதி வி.என்.ஆர் கன்ஸ்ட்ரக் சன்ஸ் சார்பில் பொறியாளர் வி.என்.ஆர். நாகராஜன் இந்த வீடுகளை கட்டு வதற்கு குறைந்த விலையில் சாமான்கள் வாங்குவதற்கு மற்றும் கட்டுமான பணி களுக்கு தேவையான ஆலோசனை களை வழங்கினார்.

;