மாவட்டங்கள்

img

திருச்சி கல்வி உரிமை மாநாட்டிற்கு புதுகையிலிருந்து ஆயிரம் பேர் பங்கேற்க முடிவு

புதுக்கோட்டை, ஆக.19- திருச்சியில் வருகின்ற ஆக.23 அன்று நடைபெறும் கல்வி உரிமை மாநாட்டிற்கு புதுக்கோட்டையிலிருந்து ஆயிரத்திற்கும் அதிகமான எழுத்தா ளர்கள், கலைஞர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், மாணவர்களை பங்கேற்க உள்ளனர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் தோழமை அமைப்புகளின் சார்பில் கல்வி உரிமை மாவட்ட மாநாடு புதுக்கோட்டை யில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டிற்கு தமுஎகச மாவட்டத் தலை வர் எம்.ஸ்டாலின் சரவணன் தலைமை வகித்தார். செயலாளர் சு.மதியழகன் வரவேற்றார். மாநில செயற்குழு உறு ப்பினர் நா.முத்துநிலவன் தொடக்க வுரையாற்றினார். திருச்சியில் நடை பெறும் கல்வி உரிமை மாநில மாநாடு குறித்து ப.குமாரவேல் பேசினர். தமுஎகச மாநில துணைத்தலைவர் மதுக்கூர் ராமலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினர் கவிச்சுடர் கவிதைப்பித்தன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். திருச்சியில் வருகின்ற ஆக.23 அன்று நடைபெறும் கல்வி உரிமை மாநாட்டிற்கு புதுக்கோட்டையிலிருந்து ஆயிரத்திற்கும் அதிகமான எழுத்தா ளர்கள், கலைஞர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், மாணவர்களை பங் கேற்கச் செய்வது, புதுக்கோட்டையிலி ருந்து டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி யின் நினைவாக பெண் கல்விச்சுடர் பயணம் மேற்கொள்வது, தேசியக் கல்விக் கொள்கையில் உள்ள பாத கங்களை விளக்கி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தொடர்ந்து பிரச்சாரத்தை மேற்கொள்வது எனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் பல்வேறு அமைப்பு களின் நிர்வாகிகள் ராசி.பன்னீர்செல் வன், எம்.முத்துக்குமார், எஸ்.ஜப ருல்லா, த.ஜீவன்ராஜ், கே.செல்வராஜ், மா.குமரேசன், ஆ.சந்திரபோஸ், என். கண்ணம்மாள், சாமிநாதன், நாராய ணன், ஜனார்த்தனன், பாபு ராஜேந்தி ரன், புதுகை செல்வா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட துணைச் செய லாளர் கவிபாலா நன்றி கூறினார்.

;