திங்கள், ஆகஸ்ட் 3, 2020

மாவட்டங்கள்

img

நீதிபதியை அவமதித்த ஏடிஎஸ்பி-யை நீலகிரியில் பணியமர்த்துவதா? அனைத்து அரசியல் கட்சியினர் கண்டனம்

உதகை, ஜூலை 3- நீதித்துறை நடுவரை அவமதித்த ஏடிஎஸ்பி நீலகிரிக்கு இடமாற்றம் செய்ததற்கு நீலகிரி மாவட்டத்தி லுள்ள அனைத்து அரசியல் கட்சி கள் கடும் கண்டனம் தெரிவித்துள் ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம் பகுதியில் விசாரணைக்காக அழைத்துச் சென்ற வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் மகன் பென் னிக்ஸ் ஆகியோர் காவல் துறை யால் கடுமையாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியது. இந்த சம்ப வம் குறித்து விசாரணை மேற் கொண்ட கோவில்பட்டி நீதித்துறை நடுவரை,  ஏடிஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன் உள்ளிட்ட காவல்துறை யினர் அவமரியாதை செய்தனர். இந்நிலையில் ஏடிஎஸ்பி குமார் காத்திருப்போர் பட்டியலில் வைக் கப்பட்ட நிலையில், தற்போது நீல கிரி மாவட்டத்தில் அமலாக்க பிரி வுக்கு  பணி மாறுதல் செய்யப்பட்டுள் ளார். இதற்கு திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உட்பட அனைத்து அர சியல் கட்சியும் கடும் கண்டனம் தெரி வித்துள்ளது.  

முன்னதாக, உதகையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி அலுவலகத்தில் புதனன்று நடை பெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர் பா.முபா ரக், உதகை சட்டமன்ற உறுப்பினர் ஆர். கணேசன், கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லக் குழு உறுப்பினர் ஆர்.பத்ரி, செயற்குழு உறுப்பினர் எல்.சங்கர லிங்கம், சிபிஐ கட்சியின் மாநில குழு உறுப்பினர் பெள்ளி, மதிமுக மாவட்டச் செயலாளர் அட்டாரி நஞ்சன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கட்டாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத் தில் சாத்தான்குளம் படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், அதில், சம்மந்தப்பட்ட ஏடிஎஸ்பி நீலகிரிக்கு மாற்றம் செய்யப்பட் டதை கண்டித்து தொடர் போராட் டங்கள் நடத்த முடிவு செய்யப்பட் டுள்ளது.

;