மாவட்டங்கள்

img

நிலவேம்பு கசாயம் வழங்கல்

பொன்னமராவதி, நவ.13- புதுக்கோட்டை பொன்னமராவதி ஒன்றிய மக்கள் பாதை அமைப்பும், பொன்னமராவதி வளையட்டி பாப்பாயி ஆச்சி  அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவும் இணைந்து பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடத்தினர். பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பாக நடை பெற்ற முகாமிற்கு மக்கள் பாதை அமைப்பின் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் அறிவானந்தம் தலைமை வகித்தார். அரசு சித்த மருத்துவர் தாமரைசெல்வன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரான்சிஸ் மேரி, ‌மக்கள் பாதை அமைப்பின் துணை ஒருங்கிணைப்பாளர் செந்தில், இணை ஒருங்கிணைப்பாளர் சின்னக்காளை, மாவட்ட நீதி திட்ட அமைப்பாளர் ஞானசேகரன், பேரூராட்சி பொறுப்பாளர் கார்த்தி, பேரூராட்சி துணை பொறுப்பாளர் சுந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;