மாவட்டங்கள்

img

நெய்வேலி : நிலக்கரி சுரங்கத்தில் தீ விபத்து

நெய்வேலியின் என்.எல்.சி சுரங்கத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கும் போது ஏற்பட்ட தீவிபத்தை, ஒரு மணி போராட்டத்திற்கு பின்பு அணைக்கப்பட்டது.

நெய்வேலியில் உள்ள என்.எல்.சி நிறுவனத்தில் நிலக்கரியானது வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது. இதில் இன்று வழக்கம்போல் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் நிலக்கரி எடுத்து செல்லும் கன்வயர்பெல்டில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதனை தொடர்ந்து பணியாளர்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பின்னர் விரைந்து வந்த வீரர்கள் ஒரு மணி போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இந்த விபத்தினால் பணியாற்றிய பணியாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

;