மாவட்டங்கள்

img

நாமக்கல் கொமதேக வேட்பாளருக்கு ஆதரவு மத்திய தொழிற்சங்கங்கள் பிரச்சாரம்

நாமக்கல், ஏப்.12- மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கொமதேக வேட்பாளர் ஏ.கே.பி.சின்னராஜை ஆதரித்து மத்திய தொழிற்சங்கங்கத்தின்ர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில்நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் கொமதேக வேட்பாளர் ஏ.கே.பி.சின்னராஜ் போட்டியிடுகிறார். வெள்ளியன்று அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கங்களான எல்பிஎப், சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டிடியுசி உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நாமக்கல் பகுதி முழுவதும் வீதிவீதியாக தீவிரமாக வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டனர்.இப்பிரச்சாரத்திற்கு எல்பிஎப் தொழிற்சங்கத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட தலைவர் பி.சிங்காரம் முன்னிலை வகித்தார். எல்பிஎப் செயலாளர் ஆர்.சுந்தரமூர்த்தி துவக்கி வைத்தார். சிஐடியு மாவட்டசெயலாளர் ந.வேலுசாமி, ஏஐடியுசி மாவட்ட செயலாளர் பி.தனசேகரன், சிஐடியு நிர்வாகிகள் எல்.பி.கண்ணன், மோகன், பாண்டியன் உள்ளிட்ட மத்திய தொழிற்சங்க தலைவர்கள் கலந்துகொண்டு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களை வஞ்சித்த அதிமுக அரசை அகற்ற வேண்டும். தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தி தொழிலாளர் விரோதப் போக்கில் செயல்படும் பாஜக அரசு அகற்றப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

;