மாவட்டங்கள்

img

விஷவாயு தாக்கி 6 மீனவர்கள் மயக்கம் 

நாகை அருகே கடலில் விஷவாயு தாக்கி மயங்கிய நிலையில் கிடந்த மீனவர்களை சக மீனவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 
நாகை மாவட்டம் காரைக்கால்மேட்டை சேர்ந்த 6 மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றனர். இந்நிலையில், கடலில் மீன்பிடிக்க சென்ற வேறு சில மீனவர்கள் படகு ஒன்று தனியாக கடலில் மிதப்பதை கண்டு அருகில் சென்று பார்த்துள்ளனர். அப்போது, மீனவர்கள் 6 பேரும் மயங்கிய நிலையில் படகில் கிடந்துள்ளனர். இதையடுத்து அந்த மீனவர்கள் அவர்களை மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

;