மாவட்டங்கள்

மக்களை ஏமாற்றும் மத்திய அரசு நாகர்கோவிலில் இரா.முத்தரசன் பேட்டி

நாகர்கோவில், ஆக.25- மத்திய அரசு தானும் ஏமாந்து மக்க ளையும் ஏமாற்றும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலா ளர் முத்தரசன் நாகர்கோவிலில் தெரி வித்தார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோவிலுக்கு சனியன்று வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செய லாளர் முத்தரசன் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நாட்டின் தற்போதைய பொருளா தார நெருக்கடிநிலை பிரச்சனையை திசை திருப்ப வேண்டும் என்ற நோக் கில் பரபரப்பையும் பதற்றத்தையும் மத்திய அரசு உருவாக்கி வருகிறது. நாட்டில் 70 ஆண்டுகள் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடி இருப்பதாக பொருளாதார வல்லு நர்கள் பகிரங்கமாக வெளிப்படுத்தி உள்ளனர். மோட்டார் வாகனம் உட்பட பல்வேறு தொழில்துறைகள் மிக வும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. தற் போது உள்ள சூழ்நிலையில் நாட்டில் வேலை வாய்ப்பின்மை பலமடங்கு அதிகரிக்கும். மத்திய அரசு கையாண்டு வரும் பொருளாதார கொள்கையினால் தொழில் நிறுவனங்கள் மூடும் அபா யம் ஏற்பட்டுள்ளது. இது பண மதிப்பி ழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பி னால் ஏற்பட்ட பாதிப்பின் உச்சம்தான்.  நாட்டின் தற்போதைய பொருளா தார நெருக்கடிநிலை பிரச்சனையை திசை திருப்ப வேண்டும் என்ற நோக்கில் பரபரப்பையும் பதற்றத்தை யும் மத்திய அரசு உருவாக்கி வரு கிறது. மத்திய அரசு சர்வாதிகார ஆட்சி செய்கிறது. இது நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நல்லதல்ல. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இதனை எதிர்த்து அனைவரும் இணைந்து போராடவேண்டும். தேசிய கல்வி கொள்கை குறித்து ரகசியமாக கருத்து கேட்பு கூட்டம் நடத் தப்பட்டுள்ளது. இது தவறு. தமிழகத் தில் சட்டம்- ஒழுங்கு என்பது கேள்விக் குறியாக உள்ளது. சட்ட ஒழுங்கை நிலைநாட்ட அரசு உறுதியான நட வடிக்கை எடுக்கவில்லை. மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பொருளாதார நெருக்கடியை சமா ளிக்க சில திட்டங்கள் அறிவித்துள்ளார். இது எந்த அளவிற்கு பலன் தரும் என தெரியவில்லை. தேசிய வங்கி களில் இருந்து கார்ப்பரேட் நிறு வனங்களுக்கு கடன் கொடுத்துவிட்டு வரா கடன் என பெயர் சூட்டிவிட்டு அவர்களிடம் இருந்து கடனை திரும்ப பெற எந்த நடவடிக்கைகளும் அரசு எடுக்கவில்லை. நாட்டின் பொருளாதார நெருக்கடி குறித்து நிதி அமைச்சர் சொல்வது சரியா அல்லது பொருளாதார நிபு ணர்கள் சொல்வது சரியா என மக்க ளுக்கு அவர்களே விளக்க வேண்டும் என அவர் கூறினார்.

;