மாவட்டங்கள்

img

ஆராய்ச்சி கருத்துகள் திருட்டு பற்றி கருத்தரங்கு

மயிலாடுதுறை, பிப்.23- மயிலாடுதுறை அருகே உள்ள ஏவிசி கல்லூரியின் நூலகம் மற்றும் ஐக்யூஏசி இணைந்து பல்கலைக்கழக மானி யக்குழு நிதியுதவியுடன் ஆராய்ச்சியில் கருத்துகள் திருட்டு, வெளியீட்டு நெறி முறை மற்றும் நிதிகள் பெறுவதற்கான வழிவகை குறித்த கருத்தரங்கம் நடந் தது. கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர்.நாகராஜன் தலைமை வகித்தார். ஐ.க்யூ.ஏ.சி ஒருங்கிணைப்பா ளர் டாக்டர் பி.அன்புசீனிவாசன், நூலகர் பொறுப்பு டாக்டர் கே.பழனிவேல் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக நூலகத் துறை தலைவர் எஸ்.சீனிவாச ராகவன் ஆராய்ச்சிக்கு நிதியுதவி பெறுவதற்கான வழிமுறை என்ற தலைப்பிலும் செயின்ட் ஜோசப் கல்லூரியின் நூலகர் டாக்டர் எம். துரைராஜன் ஆராய்ச்சியின் வெளியீட்டு நெறிமுறை எனும் தலைப்பிலும்,  பாரதிதாசன் பல்கலைக்கழக நூலகத் துறை இணைப் பேராசிரியர் சி.ரெங்க நாதன் ஆராய்ச்சியில் மேற்கொள்ளப் படும் கருத்து திருட்டுகளை கண்டறியும் நுணுக்கங்கள் மற்றும் வழிமுறைகள் என்ற தலைப்பில் பேசினார். நிறைவில் கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர்.நாக ராஜன் எம்.பில், பிஎச்டி, மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். எம்.ஏ இறுதியாண்டு மாணவி ஏ.சத்தியவதி தொகுத்து வழங்கினார். இயற்பியல் ஆய்வுத் துறை தலைவர் கே.சிங்கார வேலன் வரவேற்றார். ஆங்கிலத்துறை பேராசிரியை ஏ.லிஜ்ஜாதேவி நன்றி கூறி னார்.

;