மாவட்டங்கள்

நாகப்பட்டினம், தஞ்சாவூர் முக்கிய செய்திகள்

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் தட்டுப்பாட்டால் பல கிராம மக்கள் அவதி   
சீர்காழி, ஆக.13- சீர்காழி அருகே ஓலையாம்புத்தூர் கிராமத்தில் வீணாக வெளியேறும் கூட்டுக் குடிநீரை சேமிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வடரெங்கம் கிரா மத்தில் கொள்ளிடம் ஆற்றிலிருந்து நீர் வெளியேற்றும் நிலை யத்திலிருந்து கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் சக்தி வாய்ந்த மின் மோட்டார்களில் இருந்து குழாய்கள் மூலம் குடிநீர் பல கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் பனங்காட்டாங்குடியிலிருந்து பழைய பாளையம் கிராமத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் பிரதான குடிநீர் குழாயில் ஓலையாம்புத்தூர் மெயின் ரோட்டின் ஓரம் பூமிக்கு அடியில் குழாயில் உடைப்பு ஏற்பட்ட தால் குடிநீர் தொடர்ந்து வெளியேறி சாலையோரம் தேங்கிக் கிடக்கிறது. கடந்த 5 நாளாக தொடர்ந்து எந்தப் பயனு மின்றி குடிநீர் வெளியேறி வீணாகிறது. பல கிராமங்களுக்கு குடிநீர் செல்லும் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் பல கிராமங்களுக்கு சேர வேண்டிய குடிநீர் கிடைக்காத நிலை ஏற்படுகிறது. இதனால் கடலோர கிராமங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வெளியேறிக் கொண்டிருக்கும் குடிநீரின் அளவு மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டேயிருப்பதால் உடனடியாக குடிநீர் வெளியேறுவதைத் தடுத்து சேமிக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

‘ஆடல், பாடல் நிகழ்ச்சி வேண்டாம் நீர் நிலைகளை காக்க களம் இறங்கிய மக்கள் 
தஞ்சாவூர், ஆக.13-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த நாடியம் கிராமத்தில் சுமார் 3 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்ற னர். இக்கிராமத்தில் இளைஞர்கள் ஒன்றிணைந்து கிராமத்தின் வளர்ச்சிக்காகவும், நீர் நிலைகளை தூர்வாரி காக்க வேண்டும் எனவும் முடிவெடுத்து கடந்த 3 ஆம் தேதி ஊர்க் கூட்டம் நடத்தினர்.  இதில் அவ்வூர் மாரியம்மன் கோவில் விழாவில் நடத்தப் படும் கச்சேரி நிகழ்ச்சிக்கும், ஆடல்-பாடல் நிகழ்ச்சிக்கு ஆகும் செலவு தொகையைக் கொண்டு கிராமத்தில் உள்ள 2 ஏரி, 7 குட்டைகளையும் தூர்வாரவும், கிராமத்தின் வளர்ச்சிக்காக வும் அந்த தொகையை செலவு செய்வது என முடிவு செய்தனர். அதன்படி ஞாயிறன்று 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஏரி ஒன்றையும், கல்லணை கால்வாயிலிருந்து ஏரிக்கு நீர் வரும் வரத்து வாய்க்காலான, புதுப்பட்டினம் வாய்க்கால் 2 கி.மீ.,துாரத்திற்கு உள்ளதையும் துார்வாரும் பணியை இளைஞர்கள், கிராமத்தினர் துவங்கினர். பணியை துவங்கு வதற்கு முன்னதாக,”வான் மழையும் நிலத்தடி நீரையும் சேமிப்போம், நீர் நிலைகளை காப்போம்” எனவும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். இது குறித்து இளைஞர்கள் கூறியதாவது; முதற்கட்ட மாக நீர் வழிப்பாதைகளான வாய்க்கால்களை தூர்வாரும் பணியை துவங்கியுள்ளோம். அதை தொடர்ந்து ஏரியை தூர்வாரி விட்டால், மழை பெய்யும் போது நீரை சேமிக்க லாம் என்பதால் பணியை விரைந்து முடிக்க உள்ளோம். இது வரை எங்கள் பகுதிகளில் களத்தூர், நெடுவாசல், கொத்த மங்கலம், பேராவூரணி, ஒட்டங்காடு ஆகிய பகுதிகளை இளை ஞர்கள் இணைந்து தூர்வாரியுள்ளனர். இந்த பணியை இளை ஞர்கள் தொடர்ந்து செய்வோம்” என்றனர்.

;