மாவட்டங்கள்

img

மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை 

 தரங்கம்பாடி, ஆக.19- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மயிலாடுதுறை வட்டக் கிளை மாநாடு வட்டத் தலைவர் தென்னரசு தலைமை யில் நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் நடைபெற்றது. வட்ட செயலாளர் குருபிரசாத் வேலை அறிக்கை யையும், பொருளாளர் வெங்கடேசன் நிதிநிலை அறிக்கை யும் வாசித்தனர். மாநாட்டில் என்.ஜி.பாஸ்கரன் வட்டத் தலைவராகவும், ஆர்.சிவபழனி செயலாளராகவும், கோ.வி.வெங்கடேசன் பொருளாளராகவும், குருபிரசாத், எஸ்.ராஜு, கே.ரஜினி ஆகியோர் துணைத் தலைவர்களாகவும், ஜார்ஜ், அருண்ஜோஷி, எஸ்.பூங்கோதை ஆகியோர் இணைச் செயலாளர்களாகவும், மதிமாறன் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், நகரப் பகுதியில் தொடர்ந்து பாதாள சாக்கடை சேதமடைந்து சாலைகளில் ஆபத்தான பள்ளங்கள் ஏற்படு வதை தவிர்க்க உடனடியாக சீரமைக்க வேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;