மாவட்டங்கள்

img

நாகையில் பலியான துப்புரவுத் தொழிலாளர் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம், ஆக.19- நாகப்பட்டினத்தில் 16-ல் புதைச் சாக்கடை அடைப்பை நீக்க, மனிதக் கழிவுக் குழியில் இறங்கிய துப்புரவுத் தொழிலாளர் இருவர் நச்சு வாயு தாக்கப் பட்டுப் பலியாகினர். அவர்கள் குடும்பங்க ளுக்குத் தலா ரூ.20 லட்சம் நிவாரண நிதி யும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை யும் வழங்கக் கோரி, திங்கட்கிழமை, நாகை நகராட்சி அலுவலகம் முன்பு சி.பி.எம். சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகப்பட்டினத்தில், அரசு ஊழியர் குடியிருப்புப் பகுதி அருகே, நம்பியார் நகர்ச் சாலையில், வெள்ளிக்கிழமை மதி யம், மனிதக் கழிவுக் குழியில் (மேன் ஹோல்), அடைப்பை அகற்றிட இறங்கிய மூன்று துப்புரவுத் தொழிலாளர்கள் நச்சு வாயு தாக்கப்பட்டு, இருவர் நிகழ்விடத்தி லேயே பலியாகினர். ஒருவர் ஆபத்தான நிலையில் நாகை அரசுத் தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். நாகப்பட்டினம், காட்டுநாயக்கன் தெரு வைச் சேர்ந்த ஆர்.மாதவன்(37), என்.சக்தி வேல்(37), நாகப்பட்டினம் வண்டிப்பேட்டை யைச் சேர்ந்த டி.ஸ்ரீதர் ஆகிய மூவரும் நாகப்பட்டினம், நகராட்சியின் துப்புரவுத் தொழிலாளர்கள் ஆவர். வெள்ளிக்கிழமை மதியம், மாதவன், சக்திவேல் இருவரும் அடைப்பைச் சரி செய்திட, எந்தவிதப் பாதுகாப்பு  ஏற்பாடும் மேற்கொள்ளாமல் கழிவுக்குழியில் இறங்கினர். சற்று நேரத்தில் நச்சு வாயு தாக்கப்பட்டு, குழி யிலேயே இருவரும் இறந்துவிட, அவர் களைக் காப்பாற்ற ஸ்ரீதர் மூன்றாவது நபராகக் குழியில் இறங்க அவரும் நச்சு வாயு தாக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் நாகை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.    தொழிலாளர்களுக்கு எவ்விதப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் அளிக்காமல், குழியில் நச்சு வாயு உள்ளதா என எந்த வித ஆய்வும் செய்திடாமல், திடீரெனக் குழியில் துப்புரவுத் தொழிலாளர்களை இறக்கி, நச்சு வாயுவினால், மனித உயிர்கள் பலியாகிக் கொண்டே வரு வது அன்றாடச் செய்தியாகி விட்டது. எவ்வ ளவோ, நவீன அறிவியல் சாதனங்கள் வந்த பிறகும், தலித் மக்களான- துப்புரவுத் தொழிலாளர்களின் உயிர்கள் ஏன் இப்படி பலியாகின்றன? இதற்கு அரசும் நகராட்சி நிர்வாகமும் பதில் சொல்லியே ஆகவேண்டும் பலியான குடும்பங்க ளுக்குத் தலா ரூ.20 லட்சமும், குடும் பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வலியுறுத்தி, சி.பி.எம். சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.பி.எம். மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகைமாலி தலைமை வகித்துக் கோரிக்கைச் சிறப்புரையாற்றி னார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ். துரைராஜ், சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலா ளர் சீனி.மணி, மாவட்டத் தலைவர் பி.ஜீவா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் ப.சுபாஷ்சந்திரபோஸ், சி.பி.எம். மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.கே.ராஜேந்திரன், எம்.சுப்பிரமணியன், பி.டி.பகு, கே.செந்தில்குமார், நாகை நகரச் செயலாளர் எம்.பெரியசாமி, நாகைத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சு.மணி, சுமைப்பணித் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.செல்வராஜ்,மற்றும் தோழமைச் சங்க நிர்வாகிகள் பி.சந்திரன், பி.முனியாண்டி, வி.வி.ராஜா, எம்.பி.குணசேகரன், வி.வி.ராஜா, ஜி.ராஜேஸ்வரி எஸ்.விஜயகுமார், டி.தினேஷ்பிரபு உள்ளிட்டோர் உரை யாற்றினர்.

;