மாவட்டங்கள்

img

கலைமகள் கல்லூரியில் ஆசிரியர் தின விழா

 தரங்கம்பாடி, செப்.11- நாகப்பட்டினம் மாவட்டம் செம்பனார்கோவில் கலைமகள் கலைக்கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. கலைமகள் கல்வி நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட இவ்விழாவிற்கு நிர்வாக இயக்குநர் என்.எஸ்.குடியரசு தலைமை வகித்தார். ஆக்கூர், செம்பனார்கோவில், திருக்கடையூர், சங்கரன்பந்தல், ஆயப்பாடி, எடுத்துக்கட்டி, மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் உள்ள கலைமகள் பள்ளிகளின் ஆசிரியர்கள் கலந்து கொண்ட னர். சிறப்பாக பணியாற்றி 100 சதவீத தேர்ச்சி பெற வைக்கிற ஆசி ரியர்களுக்கும், தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி அடையும் பள்ளி களுக்கு விருதுகளும், பரிசுகளையும் நிறுவனர் நெடுஞ்செழியன், செய லர் ஜெயப்பிரகாசம் ஆகியோர் வழங்கி உரையாற்றினர். செம்பனார்கோவில் பள்ளியின் ஆசிரியை சுசிலா, கலைமகள் கல்லூரியின் முதல்வர் லியோ ஆரோக்கியராஜ் ஆகியோருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி கவுரவித்தனர்.

;