மாவட்டங்கள்

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் மீண்டும் ஆய்வு

தூத்துக்குடி, ஜூன் 30- சாத்தான்குளம் காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் மீண்டும் ஜூன் 30 செவ்வாயன்று ஆய்வு நடத்தினார்.  சாத்தான்குளம் காவல்துறையினரால் தாக்கப்பட்டு வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் கொல்லப்பட்ட வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசார ணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஒரு நொடி கூட வீணாகாமல் விசாரணை நடைபெற வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கில் சிபிஐ விசா ரணை தொடங்கும் முன் தட யங்களை அழிக்க வாய்ப்பு உள்ளதாக கூறிய நீதிபதி கள், அதுவரை நெல்லை சிபி சிஐடி டிஎஸ்பி அனில்குமார், இந்த வழக்கின் விசார ணையை இன்றே தொடங்க உத்தரவிட்டனர். தற்போது வருவாய் துறை கட்டுப்பாட்டில் சாத்தான்குளம் காவல் நிலை யம் இருந்து வருகிறது.  இந் நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பரபரப்பான அறிக்கை தாக்கல் செய்த நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கையாக, சாத்தான் குளம் காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் மீண்டும் செவ்வாயன்று ஆய்வு நடத்தினார்.

;