திங்கள், ஆகஸ்ட் 10, 2020

மாவட்டங்கள்

img

ரூ.1 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகும் புத்தக திருவிழாவில் தூத்துக்குடி ஆட்சியர் பேச்சு

தூத்துக்குடி,அக். 13 புத்தக கண்காட்சியில் ரூ.1 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகும் என  எதிர்பார்ப்பதாக தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேசினார். தூத்துக்குடி புதிய பே ருந்து நிலைய மைதா னத்தில் மாவட்ட ஆட்சி யர் சந்தீப் நந்தூரி, தலை மையில் நடைபெற்ற புத்தக த்திருவிழா கண்காட்சியில்  தூத்துக்குடி வ.உ.சி. துறை முக பொறுப்புக் கழகத் தலை வர் இராமச்சந்திரன்,  சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார் . நிகழ்ச்சியில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறு ப்புக் கழகத் தலைவர்  இராம ச்சந்திரன் பேசியதாவது: தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள 3 பள்ளிகளின் நூலகங்களுக்கு தேவை யான புத்தகங்கள் இந்த புத்தக திருவிழாவில் வாங்க ப்படும். அதேபோல், துறை முக பொறுப்பு கழகத்தின் சமூக பொறுப்பு நிதியில் இருந்து 100 பள்ளிகளுக்கு தலா  ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.5  லட்சம் மதிப்பில் புத்தக ங்கள் வாங்கி வழங்கப்பட வுள்ளது. தினமும் புத்தகம் வாசித்தால் நற்பண்புகள் வள ர்ந்து நமது வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும்.  எனவே ஒவ்வொரு வருடமும் புத்தக திருவிழா சிறப்பாக நடத்த ப்பட வேண்டும் என்றார்.  நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி பேசி யதாவது:  புத்தக திருவிழா நடத்து வது தொடர்பாக  2 மாதங்க ளுக்கு முன்பே மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், சார் ஆட்சியர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு  புத்தக திருவிழா சிறப்பாக நடத்த ப்பட்டு வருகிறது .ரூ.1 கோடி மதிப்பிற்கு புத்தகம் விற்பனையாகும் என எதிர்பா ர்க்கப்படுகிறது என்றார் .  நிகழ்ச்சியில் தூத்து க்குடி மாநகராட்சி ஆணை யர் ஜெயசீலன், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணு சந்திரன், தூத்து க்குடி சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் காலோன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமாசங்கர், மாவட்ட ஆட்சி த்தலைவரின் நேர்முக உதவி யாளர் (வளர்ச்சி) பாலசுப்பிர மணியன் மற்றும் அலுவ லர்கள் கலந்துகொண்டனர்.

;