மாவட்டங்கள்

img

பரதநாட்டியத்தில்  மாநில விருது வென்ற திருத்துறைப்பூண்டி மாணவி

 மன்னார்குடி, நவ.16-  தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறை சார்பில் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு அவற்றில் முதலிடம் பெற்றவர்களுக்கு மாநில அளவில் சேலத்தில் நடைபெற்ற போட்டிகளுக்கு  திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் சார்பில் பங்கேற்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.  இதில் பரதநாட்டியத்தில் திருவாரூர் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற திருத்துறைப்பூண்டி புனித அந்தோணியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி தொல்காப்பியா மாநில அளவில் இரண்டாம் பரிசு பெற்றுள்ளார்.  பரிசு பெற்ற மாணவி தொல்காப்பியாவை திருவாரூர் ஆட்சியர் பாராட்டி மாநில அளவில் பெற்ற விருதினை வழங்கினார்.  நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள் முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன்  புனித அந்தோணி யார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் வின்சென்ட் ஆரோக்கியராஜ், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் நலச்சங்க கவுரவத் தலைவர் டாக்டர் பாஸ்கர் மற்றும் அரசு அலுவலர் கலந்து கொண்டனர். மாநில அளவில் பரிசு வென்ற தொல் காப்பியா ஏற்கனவே மாவட்ட மற்றும் மாநில அளவில் பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். இவர் சமூக ஆர்வலர் எடையூர் மணிமாறன், மாநில குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் சங்கீதா ஆகியோரின் மகள் ஆவார்.

;