மாவட்டங்கள்

img

மன்னார்குடி புத்தகத்  திருவிழா நிறைவு 

 மன்னார்குடி, ஆக.19- மன்னார்குடியில், புத்தக திருவிழா கடந்த 9-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை பத்து நாட்கள் நடைபெற்றது. இதன் நிறைவு நிகழ்ச்சி 18-ல் இரவு மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் ப.ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. ரோட்டரி யன் வி.கோபாலகிருஷ்ணன், டி.ஜெயக்குமார், என்.அய்யா துரை சுனில் லுங்கட் முன்னிலை வகித்தனர். புத்தக திரு விழாவின் ஒருங்கிணைப்பாளர் இரா.யேசுதாஸ் வரவேற்புரை யாற்றினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் யு.எஸ். பொன்முடி, காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க தஞ்சை கோட்ட பொதுச்செயலாளர் வ.சேதுராமன், ஜேசி வி.எஸ்.கோவிந்த ராஜன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். வழக்கறிஞர் என். சாமிநாதன் கருத்துரையாற்றினார். உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் புத்தக திருவிழாவிற்கு ரூ.50 ஆயிரம் அளித்து சிறப்புரையாற்றினார். ரோட்டரியன் கே.திருநாவுக்கரசு நன்றி கூறினார்.

;