மாவட்டங்கள்

மானியத்துடன் சோலார் மின் பாதுகாப்பு வேலி விவசாயிகளுக்கு அழைப்பு

திருவாரூர், மே 27- திருவாரூர் மாவட்டத்தில், வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் அரசு மானி யத்துடன் சோலார் மின் பாது காப்பு வேலி அமைத்திட விண் ணப்பங்கள் வரவேற்கப்படு கிறது என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் விவசாயி களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்கள்.  தமிழகத்தில் தனிநபர் விவ சாயிகளுக்கு விளைநிலங்களை பாழ்படுத்தும் விலங்குகளி டமிருந்து பாதுகாத்து, விவ சாய உற்பத்தியை பாதிக்காத வண்ணமும் விளை பொருட்க ளின் மூலமாக கிடைக்கும் வரு வாயை பெருக்கிடும் நோக்கத்து டனும் சூரிய சக்தியால் இயங்கும் சோலார் மின் பாதுகாப்பு வேலி 50 சதவீத மானியத்துடன் அமைக்கும் திட்டம் 2020-21 ஆம் ஆண்டில் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.

சூரிய ஒளி மின் வேலி அமைப்பானது சூரிய ஒளி மின் தகடுகள் மூலம் கிடைக்கும் மின்சாரத்தால் இயங்கக் கூடியது.  சூரிய ஒளி மின் வேலி அமைப்பதால் விலங்குகள், வேட்டைக்காரர்கள் மற்றும் அன்னியர்களுக்கு மின் வேலி யில் செலுத்தப்படும் உயர்மின் அழுத்தத்துடன் கூடிய குறுகிய உந்துவிசை மின் அதிர்ச்சியால் அசௌகரியம் ஏற்படுத்தப்பட்டு விளை பொருட்கள் பாதிப்பில்லா மல் பாதுகாக்கப்படும். விவசாயிகள் தங்கள் பகுதி க்கு ஏற்றவாறு மின் வேலியினை 5 வரிசை (மீட்டருக்கு ரூ.250) 7 வரிசை (மீட்டருக்கு ரூ.350) 10 வரிசை (மீட்டருக்கு ரூ.450) அமைப்பினை தெரிவு செய்து கொள்ளலாம். சூரிய ஒளி மின் வேலி அமைத்திட 50 சத வீதம் மானியமாக வழங்கப் படும்.  தனிநபர் விவசாயிக்கு அதிக பட்சமாக 5 ஏக்கர் அல்லது 1245 மீட்டர் அமைத்திட ரூ.2.18 லட்சம் மானியமாக வழங்கப்படும்.  

 விருப்பமுள்ள திருவாரூர் வருவாய் கோட்டத்தை சார்ந்த விவசாயிகள் உதவி செயற்பொறி யாளர் (வே.பொ), திருவாரூர் (பவித்திரமாணிக்கம், திருவா ரூர்) அலுவலகத்திலும் மன் னார்குடி வருவாய் கோட்டத்தை சார்ந்த விவசாயிகள் உதவி செயற்பொறியாளர் (வே.பொ), மன்னார்குடி (அந்தோணியார் கோவில்தெரு, மன்னார்குடி) அலுவலகத்திலும் விண்ணப் பங்களுடன் சிட்டா, அடங்கல், நில வரைபடங்கள், ஆதார் கார்டு நகல் மற்றும் பாஸ்போர்ட்  சைஸ் போட்டோ விபரங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.  மேலும் விபரங்கள் பெற வேளாண்மைப் பொறியியல் துறை செயற்பொறியாளர், திரு வாரூர்  மற்றும் உதவிசெயற்பொ றியாளர், திருவாரூர், மன்னார்குடி அலுவலகங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

;