மாவட்டங்கள்

ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம்! பறிபோகும் மத்திய அரசு ஊழியர்களின் சலுகைகள்

மன்னார்குடி, ஆக.7- ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு இரண்டு யூனி யன் பிரதேசமாக மாற்றப்பட்டு உள்ளது. அந்த மாநிலத்திற்கான சிறப்பு சலுகைகள் பறிபோவதால் அங்கு ரயில்வே, மத்திய அரசு துறைகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்களின் சலுகைகள் பறிபோகிறது என டிஆர்இயு கருத்து தெரிவித்துள்ளது.  இதுகுறித்து அச்சங்கத்தின் உதவி பொதுச் செயலாளர் டி.மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரி வித்துள்ளதாவது: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரயில்வே, பொதுத்துறை நிறு வனங்கள், மத்திய அரசின் புள்ளி யியல், கணக்கு தணிக்கை, வருமான வரி அலுவலகங்கள், அமைச்சக செய லகங்களில் மற்ற மாநிலங்களில் இருந்து சென்று ஊழியர்கள் பணி யாற்றுகிறார்கள். அந்த மாநிலத்தை சார்ந்த மத்திய அரசு ஊழியர்களின் எண்ணிக்கை குறைவு. இதனால் இங்கு பணியாற்றும் மற்ற மாநிலத்தவர் களுக்கு பல சிறப்பு சலுகைகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. ஜம்மு-காஷ்மீரில் பணியாற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கான சலுகைகளை 1.1.2018 முதல் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு இந்த ஆண்டு துவக்கத்தில்தான் அரசு நீட்டித்தது. அதற்கான உத்தரவை பர்சனல், பொது குறைகள் மற்றும் ஓய்வூதி யத்திற்கான மத்திய அமைச்சகத்தின் கீழ் நிலை செயலாளர் சந்தீப் சக்சேனா கடந்த 8 ஜனவரி 2019 அன்று வெளி யிட்டு இருந்தார். இந்த உத்தரவு மூலம் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனந்தநாக், பார முல்லா, பத்காம், குப்வாரா, புல்வாமா, ஸ்ரீநகர், குல்காம், சாப்பியன், கந்தர் பால், பந்திபூரா என பத்து மாவட்டங்க ளில் பணியாற்றும் மத்திய அரசு ஊழி யர்கள் சிறப்பு சலுகைகள் பெற்று வரு கின்றனர். காஷ்மீர் மாநிலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படாத மற்ற மாநிலத்தை சார்ந்த  மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி இரண்டு மடங் காக கிடைத்து வருகிறது. அவர்கள் விரும்பும் பட்சத்தில் குடும்பத்தை காஷ்மீர் கொண்டு சென்றால், மாத ஊதியத்தில் 80 விழுக்காடு போக்கு வரத்து படியாக கிடைக்கும். குறைந்தது 6 மாதம் அல்லது அதற்கு மேல் காஷ்மீர் மாநிலத்தில் தங்கி பணியாற்றினால் “காஷ்மீர் பள் ளத்தாக்கு சிறப்புபடி” கிடைக்கும். இந்தப்படி ரூ.1800 முதல் ரூ.4200 வரை தர ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு ரூ.4500-ம், தர ஊதியம் ரூ. 4200 முதல் 4800 வரை பெறும் ஊழியர்களுக்கு ரூ.6000-ம், அதற்கு மேல் வாங்கும் அதி காரிகளுக்கு தகுதிக்கு ஏற்ப ரூ.7000 முதல் ரூ.9000 வரை மாதந்தோறும் கிடைக்கும். மேலும் பணியாற்றும் இடம் அருகே குடும்பத்தை வைத்துக் கொள்ள முடி யாத சூழல் இருந்தால் நாள் ஒன்றுக்கு ரூ.113 பேட்டா உண்டு. இதுதவிர காஷ்மீர் மாநிலம் சென்று பணியாற்றி வரும் மத்திய அரசு ஊழியர்கள் அனை வருக்கும் உணவுப்படியாக நாள் ஒன்றுக்கு ரூ.97.85 கிடைக்கும். மாதம் ரூ.15000 முதல் ரூ. 30000 வரை கூடுதல் வருமானம் கிடைப்பதால் பலர் விருப் பத்தில் காஷ்மீர் மாநிலம் சென்று பணி யாற்றி வருகிறார்கள். சிறப்பு அந்தஸ்து ஜம்மு காஷ்மீ ருக்கு ரத்து செய்யப்பட்டு உள்ளதால், இதர மாநிலங்களுக்கு மத்திய அர சால் அனுப்பப்படும் ஊழியர்களை போலவே இங்கு சென்று பணியாற்றும் மத்திய அரசு ஊழியர்களும் இனி கரு தப்படுவார்கள். இதனால் காஷ்மீர் மாநி லத்தில் பணியாற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கான சிறப்பு சலுகை கள் கிடைக்காது.  இவ்வாறு டி.மனோகரன் தெரி வித்துள்ளார்.

;