மாவட்டங்கள்

img

தோழர் கே.நீலமேகம் நினைவு கல்வெட்டு திறப்பு

மன்னார்குடி, ஆக.19- தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் மாநிலச் செய லாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நகரச் செயலாள ரும், மாவட்ட செயற்குழு மாவட்டக் குழு உறுப்பினராகவும் பாரதி புத்தகா லயத்தின் மாவட்ட பொறுப்பாளராக வும், தீக்கதிர், பீப்பிள்ஸ் டெமாக்ரசி, செம்மலர் புத்தகம் பேசுது உள்ளிட்ட இதழ்களின் ஏஜென்டாகவும் மூத்த தொழிற்சங்க தலைவராகவும் திரு வாரூர் மாவட்ட அரசு ஊழியர் மற்றும் தொழிலாளர்களின் பாசத்திற்குரிய தலைவராகவும் மன்னார்குடி நகர மக் களின் அன்பிற்கும் பாத்திரமான தோழர் கே.நீலமேகம் 5-வது நினைவு நாள் சிபிஎம் நகரக்குழு சார்பில் திங்கட் கிழமை அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகரக் குழு உறுப்பினர் எஸ்.ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர்கள் டி.முரு கையன், டி.சந்திரா முன்னிலை வகித்த னர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் கே.தமிழ்மணி, ஆர்.குமாரராஜா, மன்னார்குடி ஒன்றிய செயலாளர் எம். திருஞானம், தமுஎகச மாவட்ட தலைவர் ஆர்.தாமோதரன், தொழிற்சங்க தலை வர் வி.கோவிந்தராஜ், ஓய்வூதியர் சங்கத்தின் தலைவர் எஸ்.நந்தகுமார் உள்ளிட்டோர் நினைவஞ்சலி உரை யாற்றினார்கள்.  கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி, கே.என்.நினைவு கல் வெட்டை திறந்து கட்சிக் கொடியை ஏற்றி வைத்து தோழர் கே.என். நினைவு களை போற்றி சிறப்புரையாற்றினார்.  முன்னதாக தோழர் என்.கே.உரு வப்படத்திற்கு மன்னார்குடி நகர திமுக அவைத் தலைவர் த.முருகையன், துணைச் செயலாளர் வெங்கடேசன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம், ஆட்டோ தொழிலாளர் சங்கம், உள் ளிட்ட அமைப்புகளின் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னர். நகரக்குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள், பல்வேறு அமைப்பு களின் நிர்வாகிகள் உள்பட கட்சி உறுப்பினர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தோழர் கே.என்.துணைவியார் வசந்தாம்மாள் மற்றும் குடும்பத்தார் கலந்து கொண்டார்கள்.

;