மாவட்டங்கள்

116-வது ஆண்டில் சிட்டி யூனியன் வங்கி

மன்னார்குடி அக்.31- 1904 ல் துவங்கப்பட்ட சிட்டி யூனியன் வங்கி 2019 நவம்பரில் 115 வது ஆண்டை முடித்து 116 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.  இதனை பவுண்டேசன்-டே விழாவாக வரும் நவம்பர் 23 ஆம் தேதி சென்னையில் ஹோட்டல் தாஜ் கோரமண்டலில் சிறப்பாக நடத்திட வங்கி திட்டமிட்டுள்ளது.  இவ்விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்  கலந்து கொள்கிறார்கள். பொதுமக்களின் பேராதரவுடன் வங்கியின் சிறப்பான சேவை மற்றும் தொழில்நுட்ப சேவைகளால் சிட்டி யூனியன் வங்கி தமது சேவையை தொடர்ந்து செய்து வருகிறது  என வங்கி அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.

;