மாவட்டங்கள்

img

ஆட்டோ தொழிலாளர் சங்க புதிய கிளை துவக்கம்

திருத்துறைப்பூண்டி:, நவ.16-  திருவாரூர் மாவட்டம், திருத் துறைப்பூண்டி ஒன்றியம், கச்ச னம் கடைத்தெருவில் சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்க புதிய கிளை கொடியேற்று விழா மற்றும் பெயர் பலகை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. கொடியினை சிஐடியு மாவட்ட செயலாளர் டி. முருகையன் ஏற்றி வைத்து சிறப்பு ரையாற்றினார். பெயர் பலகையை ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் எம்.கே.என்.அனிபா திறந்து வைத்தார்.மார்க்சிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் கே.என். முருகானந்தம், ஒன்றிய செயலா ளர் வி.டி.கதிரேசன், ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் ஏ.நபி, முறை சாரா சங்க செயலாளர் உ.ராமச் சந்திரன், சாலை போக்குவரத்து சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ஒன். மணி, சுமைப்பணி சங்க மாவட்ட செயலாளர் கே.கஜேந்திரன், வழக் கறிஞர்கள் கதாக.அரசு.தாயுமா னவன், வி.வி.செந்தில்குமார் ஆகி யோர் புதிதாக இணைந்த உறுப்பி னர்களை வாழ்த்திப் பேசி னர். நிகழ்ச்சியில் ஐ.வி.என்.இன் குலாப், இளையராஜா, லிகாய் சங்க மாவட்டச் செயலாளர் மாதவ வேலன், நகர கூட்டமைப்பு ஒருங் கிணைப்பாளர் ஏ.கே செல்வம், நிர்வாகிகள் என்.பவுன்ராஜ், எஸ். முருகப்பா, ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். புதிகாக 41  பேர் ஆட்டோ தொழிலாளர் சங்க உறுப்பினர்களாக இணைந்த னர்.

;