செவ்வாய், ஆகஸ்ட் 4, 2020

மாவட்டங்கள்

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாலிபர் வெட்டிக் கொலை

 திருவண்ணாமலை,மே 2-திருவண்ணாமலையில் ஆட்சியர் அலுவலகம் அருகே வாலிபர் ஒருவர் விரட்டி படுகொலை செய்யப்பட்டார். திருவண்ணாமலையை அடுத்த குண்ணுமுறிஞ்சி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் தினகரன்(36). இவர் இன்று காலை திருவண்ணாமலை புறவழிச் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம கும்பல் ஒன்று அவரை வழி மடக்கியதால், அவர்களிடம் இருந்து தப்பிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அரசு அலுவலகங்கள் வளாகம் இருக்கும் பகுதி வழியாக தப்பிச் சென்றார்.இருப்பினும் அவரை விடாமல் துரத்தியே மர்ம கும்பல், தினகரனை சரமாரியாக வெட்டி தப்பியோடியது. இதில் தினகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிறிது தூரத்திலே உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு தகவல் கிடைக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார். கொலையாளிகளை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

;