திங்கள், ஆகஸ்ட் 3, 2020

மாவட்டங்கள்

img

டாஸ்மாக் கடையை மூடக்கோரி மனு

திருப்பூர், ஜூலை 8 – திருப்பூர் அங்கேரிபாளையம் சாலை சிங்காரவேலன் நகரில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக மூடும்படி அப்பகுதி பொது மக்கள் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

சிங்காரவேலன் நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தின் செயலாளர் கே.ரங்கராஜ் உள்பட அப்பகுதி பெண்கள் திரளானோர் செவ்வாயன்று காலை அங்கேரிபாளையம் சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகத் திற்குச் சென்றனர்.

அங்கு அவர்கள் அளித்த மனுவில் கூறி யிருப்பதாவது: கடந்த ஜூன் 22ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடமும், டாஸ்மாக் மேலாளரிடமும் குடியிருப் போர் சங்கத்தின் சார்பில் டாஸ்மாக் கடையை மூடச் சொல்லி மனு அளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள கலால் துறை அலுவலர் இந்த கடையையும், மதுக் கூடத்தையும் உடனடியாக மூடுவதற்கு உத்தரவிட்டுள் ளதாகத் தெரிவித்தார்.

ஆனால் தற்போது வரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.  இச்சூழலில், அரசாங்கம் விதித்துள்ள நேரத்தைத் தாண்டி மற்ற நேரங்களிலும் மதுக்கூடத்தில் மதுபான விற்பனை தொடர்ந்து நடைபெறுகிறது. அங்கு செல்வோர் முகக்கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் நெருக்கடியுடன் நிற்கின்றனர்.

ஏற்கனவே இப்பகுதி கொரோனா நோய்த் தொற்றால் பாதிக் கப்பட்டு மீண்டு வந்துள்ளது. இந்நிலையில் டாஸ்மாக் கடையில் எந்த விதிமுறையையும் கடைப்பிடிக்காமல் தொடர்ந்து விற்பனை நடைபெறுவதால் மீண்டும் கொரோனா தொற்றுப் பரவக்கூடும் என இப்பகுதி பெண் களும், குழந்தைகளும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

எனவே உடனடியாக இந்த கடையை மூடுவதற்கு மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியிருப்போர் நலச் சங்கத்தினரும், பொது மக்களும் வலியு றுத்திக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

;