செவ்வாய், ஆகஸ்ட் 4, 2020

மாவட்டங்கள்

அவிநாசியில் 6 பனியன் தொழிலாளர்களுக்கு கொரோனா

அவிநாசி, ஜூலை 6-  அவிநாசி அருகே பழங்கரை பகுதியில் ஞாயிறன்று 6  பனியன் தொழிலாளர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதி களில் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த வாரம் அவிநாசியில் வேலை செய்து வந்த வட மாநில பனியன் தொழிலாளி உட் பட 8 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய் யப்பட்டது. இதையடுத்து சுகாதாரத் துறையினர் தொற்று உறுதி செய்யப்பட்ட பகுதி முழுவதும் தீவிர பரிசோதனை ஈடுபட்டனர். இதில் அவிநாசி அருகே பழங்கரை பகுதி யில் புதிய திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பணியாற் றும் 140க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை மேற் கொள்ளப்பட்டது. இச்சோதனையில், வட மாநிலத் தொழி லாளர்கள் 4 பேர் உள்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டது. இதனைத்தொடர்ந்து திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப் பட்டனர்.

;