மாவட்டங்கள்

திருநெல்வேலி, தூத்துக்குடி முக்கிய செய்திகள்

ஆக.22-ல் ம.சு.பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா கவர்னர் பங்கேற்கிறார் 
திருநெல்வேலி, ஆக.18-நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழ கத்தின் 27-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 22-ந்தேதி நடைபெறுகிறது. இதில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். விழாவில் தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வாழ்த்தி பேசுகிறார். உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.வெங்கட்ராமன் பட்ட மளிப்பு விழா உரையாற்றுகிறார். பட்டமளிப்பு விழா வுக்கான ஏற்பாடுகளை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி, பதிவாளர் சந்தோஷ்பாபு மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

ஒண்டிவீரன் நிகழ்ச்சியில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் வருகை 
தூத்துக்குடி, ஆக.18-திருநெல்வேலியில் ஆக.20ம் தேதி நடைபெறும் ஒண்டி வீரன் நினைவு நாள் நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார். திருநெல்வேலியில் நடைபெறவுள்ள சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (ஆக. 20) காலை 8.20 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தருகிறார். மாவட்ட திமுக சார்பில் அவருக்கு விமான நிலையத்தில் வரவேற்பளிக்கப்படுகிறது என திமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ஆர். ராதா கிருஷ்ணன் எம்.எல்.ஏ. வெளியிட்ட அறிக்கையில் தெரி வித்துள்ளார்.

கோவில்பட்டி பகுதியில் கனிமொழி எம்.பி. குறைகேட்பு
தூத்துக்குடி, ஆக.18-கோவில்பட்டி பகுதிகளில் கனிமொழி எம்.பி. மக்களி டம் குறைகளை கேட்டறிந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டார். தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனி மொழி கோவில்பட்டி மேற்கு ஒன்றியத்திற்கு உள்பட்ட தெற்கு திட்டங்குளம், கொடுக்காம்பாறை, வடக்கு திட்டங் குளம், விஜயாபுரி, லாயல் மில் காலனி, தாமஸ் நகர், கூசா லிபட்டி, விஸ்வநாத தாஸ் நகர், லிங்கம்பட்டி, சமத்துவ புரம், குலசேகரபுரம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று மக்க ளவைத் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரி வித்தார். பின்னர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டார். அப்போது அவர் பேசு கையில், பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அத னைத் தீர்க்க மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து நட வடிக்கை எடுக்கப்படும். உங்களில் ஒருவராக இருந்து உங்களோடு செயல்பட்டு உங்களின் குறைகளை தீர்ப்ப தற்கு பாடுபடுவேன் என்றார்.

;