மாவட்டங்கள்

தென்காசி தனி மாவட்டம் கருத்துக் கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

திருநெல்வேலி, ஆக.18- தென்காசி தனி மாவட்டத்திற்கு நெல்லையில் கடும் எதிர்ப்பு எழுந் துள்ளது. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நெல்லையில் இருந்து பிரித்து தென்காசியை தனி மாவட்டமாக உருவாக்க கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில்  மாவட்ட ஆட்சியர் ஷில்பா, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங் கம் மற்றும் அதிகாரிகள், எம்எல்ஏக் கள், எம்.பி.க்கள் கலந்து கொண்ட னர். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 18-ந் தேதி சட்டசபையில் நெல்லை மாவட்டம் பெரிய மாவட்டமாக இருப்பதால், தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உரு வாக்கப்படும் என்று அறிவித்தார். இதுகுறித்த கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படும் என்றும், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக் கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சென்னை கூடு தல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையாளர் சத்யகோபால் தலைமையில் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் கருத்துக் கேட்பு கூட்டம் நடந்தது. இதில் சங்கரன்கோவில், அம்பா சமுத்திரம் தொகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் முக்கிய பிர முகர்கள் தங்களது தொகுதி நெல்லை மாவட்டத்திலேயே நீடிக்க வேண்டும் என கருத்து தெரிவித்த னர். அதோடு சங்கரன்கோவில் பகுதி நெல்லை மாவட்டத்தில் தொடர வேண்டும் என்று கூறி ஆட்சி யர் அலுவலகம் முன்பு விவசாயி கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  இதுகுறித்து ஞானதிரவியம் எம்.பி. கூறுகையில், “நெல்லை நாடா ளுமன்ற தொகுதியில் உள்ள எந்த சட்டசபை தொகுதிகளையும் தென்காசி மாவட்டத்தில் சேர்க்கக் கூடாது. அப்படி சேர்ப்பதால் எந்த நன்மையும் கிடையாது. தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்கு உட் பட்ட பகுதிகளை மட்டுமே சேர்க்க வேண்டும். நாங்குநேரி, ராதாபுரம், திசையன்விளை ஆகிய தாலுகாக் களை சேர்த்து வள்ளியூரை தலை மையிடமாக கொண்டு ஒரு வரு வாய் கோட்டம் அமைக்க வேண் டும். வள்ளியூர் அரசு மருத்துவமனை யை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். தென்காசி யை தனி மாவட்டமாக பிரிக்கும் போது குற்றாலம் அருவி அங்கே சென்றுவிடும். எனவே, அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி ஆகியவற்றை சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும். வள்ளியூரை நகர சபையாக அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. கோபால கிருஷ்ணன் கூறுகையில், “தென் காசி மாவட்டம் என்பது தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர் பகுதி மக்களுக்கு சரியானதாக இருக்கும். ஆனால் சங்கரன் கோவில் பகுதி மக்களுக்கு ஏற்புடை யதாக இருக்காது. எனவே, கன்னி யாகுமரி மாவட்டத்துக்கு தலைநக ரமாக நாகர்கோவில் இருப்பது போல் தென்காசி மாவட்டத்துக்கு தலைநகரமாக சங்கரன்கோவிலை அறிவிக்க வேண்டும் என கூறினார். கருத்துக்களை கேட்ட வரு வாய் நிர்வாக ஆணையர் சத்திய கோபால், தென்காசி தனி மாவட்டம் குறித்த கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பெறப் பட்ட கருத்துகளை அறிக்கையாக தயார் செய்து அரசிடம் வழங்கப் படும் என தெரிவித்தார்.

;