மாவட்டங்கள்

img

தோழர் அசோக் நினைவாக ரத்த தானம்

திருநெல்வேலி, அக்.13- கடந்த சில மாதங்க ளுக்கு முன் சாதி வெறியர்க ளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் முன்னாள் பொருளாளர் அசோக்கின் நினைவாக நெல்லையில்  ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.  நெல்லை கரையிருப்பில் நடந்த இந்த முகாமிற்கு கௌதமன் தலைமை வகி த்தார். மறைந்த அசோ க்கின் உடன் பிறந்த தம்பி  சதீஷ் வரவேற்றுப் பேசினார். வாலிபர் சங்க மத்தியக் குழு  உறுப்பினர் பாலச்சந்திரன் அசோக்கின் நினைவுகளை யும், ரத்த தானம் குறித்தும் பேசினார். வாலிபர் சங்க மா வட்டத் தலைவர் மேனகா, மாவட்டச் செயலாளர் உச்சி மாகாளி, தமிழ்நாடு விவசா யிகள் சங்க மாவட்டத் தலை வர் ராஜகுரு, சிபிஎம் நெல்லை தாலுகா செயலா ளர் எம்.சுடலைராஜ் ஆகி யோர் பேசினர்.  தொடர்ந்து பாலச்சந்தி ரன் ரத்த தான முகாமை தொடங்கி வைத்தார். இந்திய மாணவர் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் சிவசங்கர் நன்றி கூறினார். ரத்த தான முகா மில் வாலிபர் சங்க நிர்வா கிகள் முருகேசன், கருணா,  ஸ்ரீராம், மோகன், நெல்லை அரச மருத்துவக் கல்லூரி  மருத்துவமனை மருத்து வர்கள் உட்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.

;